முதல்வர் விஜய் 
தமிழ் நாடு

அம்பத்தூரில் சிங்கப்பூர் நிறுவனத்தின் தரவு மையம்

Staff Writer

சிங்கப்பூர் நிறுவனத்தின் தரவு மையத்தை முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்.

சென்னை அம்பத்தூரில் உள்ள சிங்கப்பூரைச் சேர்ந்த கேபிட்டல் லேண்ட் நிறுவனத்தின் தரவு மையத்தை, சிங்கப்பூர் நாட்டின் துணைப் பிரதமர் கிம் யோங் உடன் இணைந்து முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

இந்த தரவு மையம் 46 மெகாவாட் திறனுடன், 4,900 சர்வர் ரேக்குகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

பின்னர், 4 ஏக்கர் பரப்பளவில் 7 அடுக்கு மாடிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசுடன் சிங்கப்பூர் நிறுவனம் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்த தரவு மையம் திறக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சிங்கப்பூர் நாட்டின் துணைப் பிரதமர் கிம் யோங், முதலமைச்சர் விஜய் இருவரும் தரவு மையம் அமையவுள்ள இடத்தைச் சுற்றிப் பார்த்தனர். பின்னர், தரவு மையத்தை திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில், தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தமிழக அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram