இசையமைப்பாளர் தேவா காலமானார் 
தமிழ் நாடு

தேனிசைத் தென்றல் தேவா மறைவு!

Staff Writer

பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான தேவா தனது 75ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

சென்னை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலையில் உயிரிழந்தார்.

தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமான தேவா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் திரைப்படங்களுக்குப் பாடல்களையும், பின்னணி இசையையும் வழங்கியுள்ளார்.

இவர் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தேனிசைத் தென்றல் என்றழைக்கப்படும் இவர், கணிசமான கானாப் பாடல்களை தானே எழுதியும், பாடியும் உள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை (1992), பாட்ஷா (1995) ஆகிய திரைப்படங்களுக்கு, இவர் இசையமைத்துள்ளார்.

முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோரின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  ஆசை (1995), காதல் கோட்டை (1996), நேருக்கு நேர் (1997), நினைத்தேன் வந்தாய் (1998), பிரியமுடன் (1998), வாலி (1999), குஷி (2000) போன்ற வெற்றித் திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த மான் கராத்தே படத்தில், அனிருத்தின் இசையில் ஒரு கானா பாடலை தேவா பாடியுள்ளார்.

இவர் இசையமைத்த ஏராளமான திரைப்படங்களுக்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram