பாடகர் கிருஷ்ணராஜ் மறைவு 
தமிழ் நாடு

பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் மறைவு!

Staff Writer

பிரபலப் பின்னணிப் பாடகரும் உதவி இசையமைப்பாளருமான கிருஷ்ணராஜ்(72) இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் இவர் பாடியுள்ளார். பொற்காலம் திரைப்படத்தில் இவர் பாடிய 'தஞ்சாவூரு மண்ணு ௭டுத்து' என்ற பாடலுக்கு, சிறந்த பின்னணிப் பாடகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதினைப் பெற்றுள்ளார். இந்தப் பாடலுக்காக, சிங்கப்பூர் முன்னாள் குடியரசுத் தலைவர் செல்லப்பன் இராமநாதனின் நேரடிப் பாராட்டையும் பெற்றார். 

சேலம் மாவட்டம் வேம்படிதாளம் பகுதியைச் சேர்ந்த இவர், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இசையமைப்பாளர் தேவாவின் இசையில் ஏராளமான திரைப்படப் பாடல்களை இவர் பாடியுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான 'சூரரைப் போற்று' படத்தில், ஜீ.வி.பிரகாஷ் இசையில் வெளியான 'நாலு நிமிஷம் உன்னை காணாம' என்ற பிரபலமானப் பாடலை இவர் பாடியுள்ளார்.

தம்ஸ் அப், ருச்சி, ரோஜா, சினிமா எக்ஸ்பிரஸ் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும் கலைமாமணி விருதையும் பாடகர் கிருஷ்ணராஜ் பெற்றுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram