தமிழ்நாட்டில் வாக்காளர் தீவிரத் திருத்தப் பணிகளுக்காக சட்டமன்றத் தொகுதிவாரியாக கூடுதலாக உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொகுதிக்கு குறைந்தது 5 பேர் முதல் 20 பேர்வரை நியமிக்கப்பட உள்ளனர் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பத்து இலட்சக்கணக்கில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதால் அவர்களில் கணிசமானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கக்கூடும்.
இதைச் சமாளிப்பதற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரிகள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. எனவே, கூடுதல் தேவை கருதி அதிகபட்சம் 20 உதவி பதிவு அதிகாரிகள்வரை நியமிக்கப்படுகின்றனர்.