தமிழ் நாடு

மொழிப் போராளி சிவா திலீபன் உயிரிழந்தார்!

Staff Writer

இரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மே பதினேழு இயக்கத்தைச் சேர்ந்த சிவா திலீபன் தொடர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். 

கடந்த 11ஆம் தேதி தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில், இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என எழுதிவைத்துவிட்டு, சென்னையில் நடத்தப்பட்ட இரயில்நிலைய இந்திப் பெயர் அழிப்புப் போராட்டத்தில் சிவா கலந்துகொண்டார். 

சக தோழர்களுடன் இணைந்து பூங்கா நகர் தொடர்வண்டி நிலையத்தில் போராட்டத்தை முடித்துவிட்டுத் திரும்புகையில், யாரும் எதிர்பாராத வகையில் அப்போது அந்த வழியாக வந்த மின்சாரத் தொடர்வண்டி முன்னாள் அவர் பாய்ந்தார். அதில் தலையில் பலத்த அடிபட்ட அவர், உடனடியாக அரசு இராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

வைகோவை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சிவாவின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், உயரதர சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டார். 

அனைத்து கட்சிகளின் தலைவர்களும் மருத்துவமனைக்குச் சென்று சிவா திலீபனின் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

மருத்துவக் குழுவினரின் தொடர் சிகிச்சையின் பின்னர் நேற்று இரவு சிவா உயிரிழந்தார். 

அவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.