இன்று (4-ம் தேதி) முகூர்த்த தினம், வார விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து 885 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
“ சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 295 பேருந்துகளும், நாளை 480 பேருந்துகளும், 6-ம் தேதி சனிக்கிழமை 495 பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஜுன் 4, 5, 6 ஆகிய தேதிகளில் 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரத்திலிருந்து நாளை, நாளை மறுநாள் 25 பேருந்துகளும் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று 4,097 பயணிகளும், நாளை 8,541 பயணிகளும், சனிக்கிழமை அன்று 4,972 பயணிகளும், மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 10,079 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இடநெருக்கடியைத் தவிர்க்க TNSTC Official Website அல்லது redBus மூலமாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.” என்று போக்குவரத்துத் துறையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.