ஜெம் கிரானைட் வீரமணி 
தமிழ் நாடு

4 பெண் அதிகாரிகள்...ஜெம் வீரமணி வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு!

Staff Writer

ஜெம் வீரமணி தொடர்பான வழக்கை விசாரிக்க 4 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே காவல்துறை அதிகாரிகள் அருண், கண்ணன், யாஷ்மின் ஆகிய மூன்று பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்று சிறப்பு புலனாய்வுக் குழு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு :

1) பி.சி. தேன்மொழி, கூடுதல் ஆணையர்.

2) திஷா மிட்டல், இணை ஆணையர்.

3) ஜெ. முத்தரசி, காவல் கண்காணிப்பாளர்.

4) வி.வி. கீதாஞ்சலி, துணை ஆணையர்.

கூடுதல் ஆணையர் பி.சி. தேன்மொழி தலைமையில் இந்தக் குழுவை அமைத்து டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram