வாக்காளர் சிறப்பு முகாம் 
தமிழ் நாடு

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யணுமா... இன்றும் நாளையும் தொடர் முகாம்!

Staff Writer

தமிழகத்தில் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகின்றன. மேலும், அடுத்த வாரம் 29ஆம் தேதியும் இந்த சிறப்பு முகாம் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

வாக்காளர் சிறப்பு முகாம்

இதில், புதிய வாக்காளர் பதிவு, வாக்காளர் விவரங்களைப் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பிய தகுதியான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6, அதனுடன் கூடிய உறுதிமொழிப் படிவத்தைப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

இந்த முகாம்களில், தற்போதைய வாக்காளர் விவரங்களில் தேவையான திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் செய்யவும் கோரிக்கை அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியலிலிருந்து பெயரை நீக்குவதற்கு படிவம் 7-ஐயும், வாக்காளர் விவரத் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அட்டை மாற்றுப் பிரதி பெறுவதற்கு படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

மேலும், https://www.eci.gov.in/voters-services-portal என்ற இணையதளம், ECINET என்ற கைப்பேசி செயலி மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கடந்த 12ஆம் தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், வாக்காளர்கள் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாள்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram