தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக இருந்த முதன்மை ஆணையர், ஆணையர் பணியிடங்களுக்கு ஆட்களை நியமித்து இன்று அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதில், பத்திரிகையாளர் மகாலிங்கம் ஆணையர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான அரசாணையை நேற்று தமிழ்நாட்டு அரசின் அரசிதழில் வெளியிட்டுள்ளனர்.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ். நடராஜன் மாநில முதன்மைத் தகவல் ஆணையராகவும், எஸ்.மகாலட்சுமி, டாக்டர் டி.கே.சபீர், சி.பி.மீனா ஆகியோருடன் பி.மகாலிங்கமும் ஆணையர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசுச் செயலாளர் சி. சமயமூர்த்தி இதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளார்.
இவர்கள் மூன்று ஆண்டுகள்வரை அல்லது 65 வயதுவரை எது குறைவோ அதுவரை இந்தப் பதவியில் இருப்பார்கள்.