தமிழக வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
தமிழகத்தில் பெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தை கருத்தில் கொண்டு உட்கட்டமைப்பு, வாழ்வாதாரத்தை தற்காலிகமாக சீரமைக்க ரூ.2 ஆயிரம் கோடி நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை தொலைப்பேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மோடி, வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழக அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.