தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று பெசன்ட் நகரில் அமைதியாகப் போராடிய இளைஞர்கள் மீது காவல் அராஜகத்தை ஏவி கைதுசெய்துள்ள இந்த அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு :
"ஒட்டுமொத்த நாடும் - இவர்கள் கூட்டணி வைத்திருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் சில கட்சிகளும்கூட இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும்போது, இந்த முதலமைச்சர், யாருக்கு பயந்து நடுங்கி இந்தப் போராட்டத்தை நசுக்குகிறார்.
சுயமரியாதையும் - நாட்டின் மீதும் அக்கறையும் கொண்ட அறிவார்ந்த இளைஞர்களைக் கைதுசெய்வதன் மூலம், டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை என்பதை இந்த முதலமைச்சர் நிரூபித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள இளைஞர்களை உடனே விடுக்க வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்றத் துடிக்கும் இளைஞர் படையின் குரலை ஒடுக்குவதை ஏற்கமுடியாது." என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.