செந்தில் பாலாஜி, அசோக் குமார் 
தமிழ் நாடு

குதிரை பேர வழக்கு... செந்தில் பாலாஜிக்கு சம்மன்!

Staff Writer

த.வெ.க. எம்.எல்.ஏ.களை விலைக்கு வாங்க முயன்றதான வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரின் தம்பி அசோக் குமார் ஜூலை 6இல் சென்னை போலீஸ் விசாரணைக்கு வரும்படி அழைப்பாணை அளிக்கப்பட்டுள்ளது.

கரூர், இராமேசுவரபட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் வீட்டில் அவர்களின் தந்தையிடம் காவல்துறையினர் அழைப்பாணையை வழங்கினர்.

இந்த வழக்கு தொடர்பாக, சென்னை, திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் விசாரணைக்கு வருமாறு அவர்கள் அவரிடம் தெரிவித்தனர்.

இதனிடையே, செந்தில் பாலாஜி, அசோக் குமார் இருவரும் வெளிநாட்டுக்குத் தப்பிவிடாதபடி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.