சுந்தர் சி 
தமிழ் நாடு

குஷ்புவின் கணவர் சுந்தர் சி மத்திய மதுரை தொகுதியில் போட்டி!

Staff Writer

மத்திய மதுரை தொகுதியில் நடிகை குஷ்புவின் கணவரும் திரைப்பட இயக்குநருமான சுந்தர் சி போட்டியிடுகிறார். புதிய நீதிக் கட்சியின் சார்பில் அவர் போட்டியிடுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. 

இந்தத் தொகுதியில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதிக் கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக, கடந்த மாதத்துக்கு முன்னர் மதுரையில், புதிய நீதிக் கட்சி சார்ந்த சாதிச் சங்க நிகழ்வில் சுந்தர் கலந்துகொண்டு பேசியது கவனத்தை ஈர்த்தது. அப்போதிருந்தே அவருக்காக இந்தத் தொகுதியை ஒதுக்கிவிட்டனர் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.