மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகில் உள்ள சர்ச்சைக்கு உரிய தூணில் இந்த ஆண்டு கார்த்திகைத் தீபம் ஏற்றலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் முன்னைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாகக் கூறினாலும், ஒரே முறையாக மட்டும் இந்த ஆண்டு சர்ச்சைத் தூணில் தீபம் ஏற்றிக்கொள்ளலாம் என உச்சநீதிமன்ற அமர்வு கூறியிருக்கிறது.
இதேசமயம், கோயில் அதிகாரிகள், துறைப் பணியாளர்களைத் தவிர, பொதுமக்கள் யாரும் அங்கு அனுமதிக்கப்படக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கும்பல் சேரவோ கோசம்போடவோ கூடாது; தேவைப்பட்டால் மத்திய காவல் படையை வைத்துக்கொள்ளலாம் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.