நெல்லை கவின் ஆணவப் படுகொலை 
தமிழ் நாடு

கவின் ஆணவக்கொலை- தலைமறைவுக் குற்றவாளி பெண் எஸ்.ஐ. கைது!

Staff Writer

நெல்லை மாவட்டம் கவின் ஆணவக்கொலை செய்யப்பட்டதில் தலைமறைவாக இருந்துவந்த கொலையாளி சுர்ஜித்தின் தாயாரும் உதவி எஸ்.ஐ.யுமான கிருஷ்ணகுமாரி இன்று கைதுசெய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின், கடந்த ஆண்டு ஜூலையில் நெல்லையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே உலுக்கியெடுத்த இந்தக் கொலை வழக்கில், கவினின் காதலி மருத்துவர் சுபாசினியின் சகோதரர் சுர்ஜித், அவரின் தந்தை எஸ்.ஐ. சரவணன் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதையடுத்து சுர்ஜித்தின் உறவினர் கல்குவாரி உரிமையாளர் ஜெயபால் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்துவந்த சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இவரின் கைது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.