த.வெ.க.வில் விஜயதாரணி 
தமிழ் நாடு

3ஆவது கட்சியாக த.வெ.க.வுக்குத் தாவிய விஜயதாரணி!

Staff Writer

த.வெ.க.வின் பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில், இன்றும் வெவ்வேறு கட்சிகளிலிருந்து மாறி அக்கட்சியில் இணைந்தனர்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால், முன்னாள் எம்.பி.கள் நா.பாலகங்கா, ஆர்.வனரோஜா, இளவரசன்,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ரவி, விஜயதாரணி, முருகேசன்,

தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் மேயர்கள், மாவட்டச் செயலாளர்கள், கவுன்சிலர்கள், இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மாநில, மாவட்ட, பகுதி, நகர, வட்ட, ஒன்றிய மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட சுமார் 2500-க்கும் மேற்பட்டோர் த.வெ.க.வில் சேர்ந்தனர்.

அக்கட்சியின் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் முன்னிலையில், அவர்கள் தங்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

அமைச்சர்கள் ஆதவ், ராஜ்மோகன், விஜய் பார்த்திபன் ஆகியோர் வரவேற்றனர்.

இன்று த.வெ.க.வில் இணைந்த விஜயதாரணி மூன்று முறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, கடந்த 2024ஆம் ஆண்டில் பா.ஜ.க.வில் சேர்ந்தார். தேர்தலுக்குப் பின்னர் இங்கு சேர்ந்துள்ளார்.