தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று (மார்ச் 15) அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது:
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களிலும்17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 824 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளன. 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 25 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குச் சாவடி மையங்கள் 100 சதவீதம் வெப் கேஸ்டிங் செய்து கண்காணிக்கப்படும்.
தமிழ்நாடு தேர்தல்
வேட்புமனுத் தாக்கல் - மார்ச் 30
வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள் - ஏப்ரல் 6
வேட்பு மனு பரிசீலனை - ஏப்ரல் 7
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் - ஏப்ரல் 9
வாக்குப் பதிவு நாள் - ஏப்ரல் 23
வாக்கு எண்ணிக்கை - மே 4