ஆற்காடு நாவப் முகமது அலி 
தமிழ் நாடு

“பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு…” - விஜய் எதிரே ஓப்பனாக பேசிய ஆற்காடு நவாப்!

Staff Writer

"தமிழ்நாடு, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான மாநிலமாக திகழ்ந்து வருகிறது.” என தவெக சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்காடு நாவப் முகமது அலி பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெகவின் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்காடு நவாப் அலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேடையில் அவர் பேசிய பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. நிகழ்வில் அவர் பேசியதாவது: நான் ஒரு இஸ்லாமியர். என்னுடைய மகன் பெயர் ஜீசஸ். ஜீசஸை நான் நம்பவில்லை என்றால் நான் இஸ்லாமியரே கிடையாது. விஜய் மக்களை வழிநடத்தக்கூடிய தலைவர்.

ஜென் ஸீ தலைமுறையினரின் தலைவராக விஜய் வந்துள்ளார். உங்களுக்கும் தவெகவினருக்கும் வாழ்த்துகள்.

ஒற்றுமைக்கான உதாரணமாக நம்முடைய தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. மனிதநேயத்தை மதிக்கக் கூடிய மாநிலமாக இது உள்ளது. தமிழ்நாடு அமைதியான மாநிலமாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பான மாநிலமாக திகழ்ந்து வருகிறது. பொருளாதாரத்தில் தமிழகம் 2ஆவது இடத்தில் உள்ளது.” என்றார்.

திமுகவை மிக கடுமையாக விஜய் விமர்சித்து வரும் நிலையில், ஆற்காடு நவாபின் திமுக ஆதரவுப் பேச்சு கவனம் பெற்றுள்ளது.