ஜோதி நிர்மலாசாமி
ஜோதி நிர்மலாசாமி  
தமிழ் நாடு

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி!

Staff Writer

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தேர்தல் ஆணையராக இருந்த பழனிகுமார் ஓய்வு பெற்றதையடுத்து பத்திரப் பதிவுத்துறை செயலாளராக இருந்த ஜோதி நிர்மலாசாமி புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.