தமிழிசை செளந்தரராஜன் 
தமிழ் நாடு

பேரம் பேசுகிறாரா திருமா?- தமிழிசை சந்தேகம்

Staff Writer

விஜய்க்கு ஆதரவா இல்லையா என கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவையொட்டி தாங்கள் தீர்மானிப்போம் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். 

ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் ஆதரவுக் கடிதத்தைக் கொடுத்து ஒரு நாள் கடந்தும் இன்னும் திருமாவளவன் தன் முடிவை அறிவிக்காமல் இழுத்தடித்து வருகிறார். 

இதைப் பற்றி விமர்சித்து பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை காணொலி வெளியிட்டுள்ளார். அதில், ”வெளித்தோற்றத்தில் விஜய்யை ஆதரிப்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, எல்லாரும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவைத் தெரிவித்துவிட்டு, பா.ஜ.க. ஆளுநருக்கு அழுத்தம் தருகிறது என சொல்கிறார்கள்; அதிலும் உண்மை இல்லை. திருமாவளவனின் ஆதரவுக்காகக் காத்திருக்கிறோம் என சொல்கிறார்கள். கம்யூனிஸ்ட்டுகளுடன் ஒட்டுமொத்தமாக முடிவைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு திருமாவளவன் தற்போது ஏன் தயங்குகிறார்? என்ன பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்?” என்று தமிழிசை கூறிக்கொண்டிருக்கிறார்.