ராமதஸ் உடன் தமிழ்குமரன் 
தமிழ் நாடு

பாமக இளைஞரணி தலைவரானார் தமிழ்க்குமரன்!

Staff Writer

ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனுக்கு பாமக மாநில இளைஞரணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பாமகவில் ராமதாஸ்- அன்புமணி இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில், விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தல் பாமக நிறுவனர் ராமதாஸ் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜி. கே. மணியின் மகன் தமிழ் குமரனுக்கு மாநில இளைஞரணி தலைவர் பதவி வழங்கினார். அதற்கான நியமன உத்தரவை ராமதாஸின் மூத்த மகள் காந்திமதி தமிழ் குமரனிடம் வழங்கினார். இது கட்சியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ் குமரனை பொறுத்தவரை நன்கு படித்தவர் என்பதோடு மட்டுமல்லாமல் நிர்வாகத் திறமையும் மிக்கவர். பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகாவில் தலைமை அதிகாரியாக அவர் பணியாற்றி வருகிறார். இதனால் இவரது தொடர்புகள், நட்புகள் அனைத்தும் கடல் கடந்தும் பரந்து விரிந்து உள்ளன. இவை அனைத்தும் பாமகவின் வளர்ச்சிக்கு ஏதோ ஒரு வகையில் உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.