கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் 
தமிழ் நாடு

கூடுதல் விலைக்கு மின்சாரம்... அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு!

Staff Writer

வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.

கோடை காலம் முதல் தமிழகத்தில் தொடர்ந்து மின்சாரத் தடங்கல் நீடித்துவருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் மின்சாரத் தடையால் குடியிருப்புகள், தொழில் இடங்கள், பள்ளி, கல்லூரிகள் எனப் பல தரப்பினரும் அவதியடைந்துவருகின்றனர்.

இந்நிலையில் அவசரகால அடிப்படையில் 4,500 மெகாவாட் மின்சாரத்தை, வெளிச்சந்தையில் கொள்முதல் செய்ய அரசு ஒப்பந்தம் கோரியிருந்தது.

அதன்படி, ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வெளிச்சந்தையிலிருந்து கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்கு முன்னர் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20 முதல் ரூ.30 வரை வாங்கப்பட்ட நிலையில், த.வெ.க. அரசு கூடுதல் விலைக்கு வாங்குவதாக பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "இதற்குமுன் மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்ட முந்தைய ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, தற்போது ஒரு யூனிட்டுக்கு ரூ. 35 என்ற விலையில் கொள்முதல் செய்வது என்பது, நிர்வாகம் அல்லது திட்டமிடலில் உள்ள திறமையின்மையோ அல்லது மாபெரும் ஊழலோ ஆகும். அல்லது இரண்டும் இருக்கலாம்." என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ரூ. 35 என்ற விலையில் மின்சாரம் கொள்முதல் செய்தால் தமிழக அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram