ஆதிதிராவிடர் ஆணையத் தலைவர் நிர்ணயம் 
தமிழ் நாடு

ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையத் தலைவர் நியமனம்!

Staff Writer

தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம்.வி. முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவராக இருந்த தமிழ்வாணன், கடந்த மார்ச் மாதம் காலமானதால் நீண்ட காலமாக இந்தப் பதவி காலியாக இருந்தது.

ஆணையத்தின் தலைவர் பதவியிடத்தை விரைவில் நிரப்ப வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்டம், உச்சிமலை குப்பம் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, இதுதொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவராக எம்.வி. முரளிதரனை தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.

இவர் கடந்த 2016 முதல் 2019ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார்.

மேலும், இவர் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் இருந்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram