முக்கிய குற்றவாளி நிஷாந்த் கைது 
தமிழ் நாடு

மதுரை நகைக்கடை கொள்ளை-முக்கிய குற்றவாளி நிஷாந்த் கைது!

Staff Writer

மதுரை நகைக்கடைக் கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி நிஷாந்த் என்பவரை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

மதுரையில் உள்ள மிகவும் பரபரப்பான புறவழிச்சாலையான காளவாசலில் உள்ள தனியார் நகைக்கடையான தனிஷ்க்கில் வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கநகைகள், கடந்த 12ஆம் தேதி அதிகாலை காணாமல் போயின.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.

முன்னதாக, நகைகளைக் கொள்ளையடித்த யூடியூபர் நிஷாந்த்தின் தந்தை சுரேஷ், தோழியான இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். அவர்களின் தகவல்கள் மூலமாக 15 கிலோ நகைகளை போலீசார் மீட்டனர்.

முக்கிய குற்றவாளியான நிஷாந்த் தலைமறைவாக இருந்துவந்தார்.

அவரை தமிழகத்தில் தருமபுரி, கோவை ஆகிய மாவட்டங்களிலும், கேரளா, பெங்களூர் உட்பட்ட இடங்களிலும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம் தேசம்பட்டி பகுதியில் மறைந்திருந்த நிஷாந்த்தை போலீசார் இன்று கைது செய்தனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram