பெற்றோர், உறவினர்கள் போராட்டம் 
தமிழ் நாடு

2 ஆசிரியர்கள் இடைநீக்கம்... தற்கொலையான மாணவரின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம்!

Staff Writer

கோவையில் சாதியக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட மாணவரின் பெற்றோர்கள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த மாணவன் அகிலன் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அவருடைய வகுப்பாசிரியர் சாதியரீதியாகக் கேள்விகளை சக மாணவர்கள் முன்னிலையில் கேட்டும், சாதிய உள்நோக்குடனும் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், மாணவரின் உணவுப் பழக்கத்தைக் குறித்தும் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, சக மாணவர்கள், அகிலனின் சாதியைக் குறிப்பிட்டு அவரைத் துன்புறுத்தியதால் அவர் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியரிடம் அகிலன் முறையிட்டும், அவர் ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

இதில் போராட்டம் நீடித்தநிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வகுப்பாசிரியர், பள்ளியின் தலைமையாசிரியர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்கொலையால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவரின் பெற்றோர், உறவினர்கள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த சம்பவத்தை எதிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram