ஒசூர் அருகே பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலை பேரண்டப் பள்ளி சானமாவு வனப்பகுதியில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒசூர் அடுத்த பேரண்டப் பள்ளி அருகே சானமாவு வனப்பகுதியில் இன்று (அக்டோபர் 12) அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது கார், அதனை தொடர்ந்து பிக்கப் வேன், மற்றொரு கார் மற்றும் பின்னால் வந்த லாரியும் வரிசையாக ஒன்றின் மீது ஒன்றாக மோதின.
எதிர்பாராத இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது இதில் காரில் பயணித்த நான்கு பேருமே பலியாகி உள்ளனர் இடிபாடுகளில் சிக்கிய உடலை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்விற்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. உடனடியாக போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை சாலை ஓரத்தில் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்
விபத்து குறித்து அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் மணிவண்ணன் என்பவர் கனடா நாட்டில் இருந்து பெங்களூர் வந்துள்ளாதாக தெரிகிறது. பெங்களூரில் இருந்து அவரை அழைத்து வருவதற்காக சேலத்தைச் சேர்ந்த முகிலன் மற்றும் நண்பர்கள் சென்று திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது