சென்னை கோயம்பேடு பணிமனையில் திருடப்பட்ட அரசுப் பேருந்து, ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தின் குளிர்சாதனப் பேருந்து பணிமனையில் நேற்று அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திருப்பதிக்கு செல்ல தயாராக இருந்த அரசுப் பேருந்தை மர்ம நபர் திருடிச் சென்றதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் பணிமனையின் மேலாளர் புகார் அளித்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே பேருந்தை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து பேருந்தை திருடிச் சென்ற காது கேளாத, வாய் பேச முடியாத ஒடிசாவைச் சேர்ந்த ஞானசேகர் சாகு (வயது 24) என்ற இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.