தமிழ் நாடு

“விஜய்க்கு கூடுகிற கூட்டம் ஓட்டாக மாறாது...” - கமல்ஹாசன்

Staff Writer

தவெக தலைவர் விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது. அது தனக்கும் பொருந்தும் என மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் நடிகர் விஜய், சனிக்கிழமைகளில் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று நாகப்பட்டினத்தில் பிரசார கூட்டத்தில் பேசினார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலிடம், ”விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா.” என கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த கமல், “விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது. இது எனக்கும் பொருந்தும். கூட்டம் ஓட்டாக மாறாது என்பது அனைத்து தலைவர்களுக்கும் பொருந்தும். திமுக கூட்டணி வலிமையாக உள்ளது” என்றார்.

மேலும், ”விஜய்க்கு என்ன ஆலோசனை கூற விரும்புகிறீர்கள்..” என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், ”நல்ல பாதையில் செல்லுங்கள். தைரியமாக முன்னேறுங்கள். மக்களுக்கு நன்மை செய்யுங்கள்.” என்றார்.