தமிழ் நாடு

இனி ஆளுநர் மாளிகை ‘ராஜ் பவன்’ இல்லை... மத்திய அரசு உத்தரவு!

Staff Writer

நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர்களான ராஜ்பவன் அல்லது ராஜ் நிவாஸ் என்பதை லோக் பவன் அல்லது லோக் நிவாஸ் என மாற்றம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்என் ரவியின் கோரிக்கையை ஏற்ற மத்திய உள்துறை அமைச்சகம் இந்த பெயர் மாற்ற உத்தரவை வெளியிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் மாளிகைகளான ராஜ்பவன் மற்றும் ராஜ் நிவாஸ் ஆகியவற்றின் பெயர்களை மாற்ற வேண்டும். இனி ராஜ்பவன் என்பது லோக் பவன் என்றும் ராஜ் நிவாஸ் என்பது லோக் நிவாஸ் என்று மாற்றப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக் பவன் அல்லது லோக் நிவாஸ் என்பது மக்களின் மாளிகை என்பதாகும்.

மத்திய அரசின் உத்தரவை அடுத்து பல்வேறு மாநிலங்களில் ராஜ்பவன் என்ற பெயரை லோக் பவன் என மாற்றம் செய்யப்பட்டுள்ளன.