முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
தமிழ் நாடு

‘கொள்கையற்ற கூட்டத்துக்கு ஒன்றும் தெரியாது’ - முதல்வர் ஸ்டாலின் விளாசல்!

Staff Writer

“வட இந்திய யூடியூப் சேனல்கள்கூட திராவிட மாடலை பற்றி ஆய்வு செய்து அவர்கள் மாநில மக்களுக்கு கூறிக்கொண்டிருக்கின்றனர். இது எதுவுமே சிலருக்கு தெரிவதில்லை.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி சென்றுள்ளார். அவர் அங்கு நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 2 ஆயிரத்து 885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும், இந்த அரசு விழாவில் 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியவதாவது,

மக்களிடம் திமுக அரசுக்கான ஆதரவு நாளுக்குநாள் பெருகி வருகிறது. வரும் வழியெல்லாம் மக்கள் திரண்டு வரவேற்பு அளித்ததால் கிருஷ்ணகிரிக்கு வர தாமதமானது. தமிழ்நாடு அரசு, இந்தியாவுக்கே முன்னோடியாக இருக்கிறது. வட இந்திய யூடியூப் சேனல்கள்கூட திராவிட மாடலை பற்றி ஆய்வு செய்து அவர்கள் மாநில மக்களுக்கு கூறிக்கொண்டிருக்கின்றனர். இது எதுவுமே சிலருக்கு தெரிவதில்லை. தெரிந்தும் மறைக்க விரும்புகின்றனர். பொய்களை பரப்புவதும், களங்கம் கற்பிப்பதும் காலம் காலமாக அவர்கள் அரசியல், கொள்கையற்ற கூட்டத்திற்கு ஒன்றும் தெரியாது. மலிவான அரசியல் அது.” என்றவர், “அஞ்செட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும்.

கெலமங்களத்தில் ரூ. 12 கோடியில் சாலைகள் அமைக்கப்படும்.

ஒசூரில் எல்சி 104 ரயில்வே கேட் பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.

கெலமங்களம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

ஒசூர் மாநகரில் NH 44, 844 சாலைகளை இணைக்க புதிய சாலை அமைக்க புதிய சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்” ஆகிய 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.