ஆண்டுதோறும் இனி டிசம்பர் கடைசி வாரத்தில் திருக்குறள் வாரமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கு தமிழ் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இதற்கு திருக்குறள் பேரவையம் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
பேரவையத்தின் பொறுப்பாளர் பொழிலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருக்குறள் திருக்கிழமை(வாரம்) தமிழ்நாடு அரசு அறிவிப்புக்கு மிகவும் மகிழ்ச்சி.. நன்றி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த திசம்பர் 11 ஆம் நாள் கோவையில் தவத்திரு மருதாசல அடிகளார் தலைமையில் கூடிய திருக்குறள் பேரவையத்தின் கலந்தாய்வுக் கூட்டத்தில் கூடி முடிவெடுத்துத் தமிழ்நாடு அரசிற்கு முன்வைத்த வேண்டுகையைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டு திருக்குறள் திருக் கிழமையை அறிவுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது..
தமிழ்நாட்டில் உள்ள ஏன் உலகம் எங்கும் உள்ள திருக்குறள் பற்றாளர்கள் உணர்வாளர்கள் அனைவரும் திருக்குறள் திருக்கிழமை தவறாமல் கடைபிடித்து விரிவாகத் திருக்குறள் கருத்துகளைப் பரப்புவதும் விழாக்களாக கொண்டாடுவதும் தேவையானது..
முதல்வர் அவர்கள் திருக்குறளின் சிறப்பு அறிந்து குறளறமே ஆரியப் பார்ப்பனித்தை சாதியத்தை வீழ்த்தும் என உள்ளடக்கிய கருத்தைப் பதிவு செய்திருப்பது பெரிதும் மகிழ்ச்சிக்குரியது..
இனி, ஆண்டுதோறும் திருக்குறள் திருக்கிழமை நிகழ்வை.. விழாவை மேற்கொள்வோம் வாருங்கள்..” என்றும் பொழிலன் கூறியுள்ளார்.