நாதக சீமான் 
தமிழ் நாடு

செய்தியாளருக்கு மிரட்டல்... சீமான் மீது என்னென்ன வழக்குகள்?

Staff Writer

புதுச்சேரியில் செய்தியாளரை ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அக்கட்சியினர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளளது.

புதுச்சேரியில் நேற்று (நவம்பர் 23) நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எஸ்.ஐ.ஆர். தொடர்பாக கேள்வி கேட்ட கலைஞர் தொலைக்காட்சி செய்தியாளர் ராஜீவை, ஒருமையில் வாடா.. போடா.. என்று மிரட்டல் தொனியில் பேசினார். அவரது கட்சியினர் கொலை மிரட்டல் விடுத்து கொலை வெறியோடு கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த ராஜீவை, சக செய்தியாளர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

சீமானின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு பத்திரிக்கையாளர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர் ராஜீவ், வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது 296 b (தகாத வார்த்தையில் திட்டுதல்), 115(2) (தாக்குதல்), 351(2) (கொலை மிரட்டல்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.