தலைமைச்செயலகம் 
தமிழ் நாடு

3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.கள் திடீர் பதவி விலகல்!

Staff Writer

விஜய் கட்சியின் ஆட்சிக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூன்று பேர் இன்று திடீரென தங்கள் எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகினார்கள். 

மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகியோரே சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் தங்கள் விலகல் கடிதத்தைக் கொடுத்தனர்.

அதையடுத்து, அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவைச் சந்தித்து பொன்னாடை போர்த்தினர்.

தலைமைச்செயலகத்தில் வைத்து மூவரும் த.வெ.க. வில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் பதவிவிலகியதன் மூலம் அ.தி.மு.க.வின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 44ஆகச் சுருங்கியிருக்கிறது. எடப்பாடி தரப்பில் 27 பேரும் வேலுமணி தரப்பில் 17 பேரும் உள்ளனர்.