தமிழ் நாடு

திருச்சி கிழக்கு தொகுதி காலி- சட்டப்பேரவைச் செயலகம் அறிவிப்பு!

Staff Writer

முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வென்ற திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

த.வெ.க. தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏதாவது ஒரு தொகுதி பதவியிலிருந்து விலகியாக வேண்டும் என்பதால், திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி பதவியிலிருந்து விஜய் விலகினார்.

இந்த நிலையில், அந்தத் தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது. தமிழக அரசின் அரசிதழில் இதற்கான அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.