தமிழ்நாடு வேளாண்மை நிதிநிலை அறிக்கையை, வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அதில் அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:
1) மண் வளத்தை பாதுகாக்க ரூ.122.51 கோடி, தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
2) ஒவ்வொரு உழவருக்கும் பயன்பெறும் வகையில் ஏஐ அடிப்படையிலான உழவர் செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
3) பயறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்களில் தன்னிறைவு அடைவதற்காக ரூ.203.64 கோடியில் இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
4) சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரிக்க ரூ. 63.81 கோடியில் 'தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்' அறிமுகப்படுத்தப்படுகிறது.
5) சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்ற பயிர்களின் சாகுபடியை இருமடங்காக அதிகரிக்க 'தமிழ்நாடு குறுதானிய இயக்கம்' ரூ. 7.61 கோடியில் செயல்படுத்தப்படும்.
6) அதிக ஊட்டச்சத்து நிறைந்த சீமைத் தினை, பாப்பாரை, குலசாமை ஆகிய பயிர்களின் செயல்விளக்கத் திடல்களை அமைக்க ரூ. 30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
7) பருத்தி உற்பத்தியைப் பெருக்கிட ரூ. 27.21 கோடியில் 'பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்' செயல்படுத்தப்படும்.
8) காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்க ரூ. 7.35 கோடியில் 'காட்டுப்பன்றி சேதத் தடுப்புத் திட்டம்' செயல்படுத்தப்படும்.