இலவச ஆடு,மாடு வழங்கும் திட்டம் 
தமிழ் நாடு

மீண்டும் இலவச ஆடு வழங்கும் திட்டம்!

Staff Writer

ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 'வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின்' மூலமாக 100 சதவீதம் மானியத்தில் ஐந்து வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடு வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்காக, ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் இப்படியான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்போது, மீண்டும் இந்த ஆட்சியின் முதல் நிதிநிலை அறிக்கையில், ஒவ்வோர் ஆண்டும் தகுதிவாய்ந்த 10,000 பெண்களுக்கு, ரூ. 57 கோடியில் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் தலைமையில், உயர்நிலை வருவாய் மேம்பாட்டுக் குழு, உயர்நிலை செலவின சீர்திருத்தக் குழுவையும் அமைத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள நிதிச் சிக்கல்களைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு, முறையான வருவாய்த் திரட்டல், நேர்த்தியான செலவின மேலாண்மை ஆகியவற்றின் மூலம் அவற்றை இந்த ஆட்சி தீர்க்கும் என்றும் சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram