திட்டங்களின் பெயர் மாற்றம் AI
தமிழ் நாடு

தி.மு.க. அரசின் திட்டப் பெயர்களா... வேண்டாம் என மாற்றிய விஜய் அரசாங்கம்!

Staff Writer

முந்தைய தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களின் பெயர்களை விஜய் தலைமையிலான அரசாங்கம் மாற்றியுள்ளது.

ஏற்கெனவே, முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேசன் பொருள்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தில், தாயுமானவரின் பெயரை விஜய் அரசாங்கம் நீக்கிவிட்டது. மகளிர் விடியல் பயணத்தின் பெயரில் விடியல் என்பதை நீக்கிவிட்டது. இப்படியாக, பெயர்மாற்ற நடைமுறைகள் தொடங்கிவிட்ட நிலையில், இன்றைய நிதிநிலை அறிக்கையிலும் பல திட்டங்கள் பெயர் மாற்றப்பட்டுள்ளன.

1) உங்கள் கையில் உலகம் மடிக்கணினி திட்டம் - வெற்றி மடிக்கணினி திட்டம்

2) முதல்வர் படிப்பகம் - டிஜிட்டல் நூலகம்

3) விலையில்லா சைக்கிள் திட்டம் - நவீன மிதிவண்டித் திட்டம்

4) அரசு மாதிரிப் பள்ளி மற்றும் தகைசால் பள்ளி- காமராஜர் சிறப்புப் பள்ளி

5) நான் முதல்வன் திட்டம் - வெற்றி திறன் பயிற்சித் திட்டம்

6) விலையில்லா ஆடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டம்- வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்

7) கலைஞர் கனவு இல்லம் திட்டம் - வெற்றி வீடு வழங்கும் திட்டம்

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram