கொரிய வாகன உதிரி பாக நிறுவனம் 
தமிழ் நாடு

ஆந்திராவுக்குச் சென்றதா தமிழ்நாட்டு முதலீடு? - பேக்ட் செக் பிரிவு விளக்கம்

Staff Writer

தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வரும் நிலையில், இதுகுறித்து தமிழக அரசின் தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம் அளித்துள்ளது.

அதன் விளக்கம்:

"ஹூண்டாய் நிறுவனத்தின் உதிரிபாகங்கள்,வாகன உற்பத்தி சார்ந்த சப்ளையர் நிறுவனங்களில் பெரும்பாலானவை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.

குறிப்பாக, சியோயான் இ-ஹ்வா, ஹ்வாஷின் போன்ற கொரிய நிறுவனங்கள், தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஹூண்டாய் நிறுவனத்திற்கு சப்ளை செய்து வருகின்றன.

ஆந்திராவில் கியா நிறுவனம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சியோயான் இ-ஹ்வா நிறுவனம், கடந்த 2017ஆம் ஆண்டிலேயே ஆந்திராவிலுள்ள அனந்தபூரில் தனது உற்பத்தி மையத்தைத் தொடங்கியது.

தற்போது கியா நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்தைக் கருத்தில் கொண்டு சில சப்ளையர் நிறுவனங்கள், ஆந்திரப் பிரதேசத்தில் தங்களது உற்பத்தியை விரிவுப்படுத்தி வருகின்றன. ஏற்கெனவே தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் சப்ளையர்கள், தொடர்ந்து தமிழ்நாட்டிலேயே முதலீடுகளை விரிவுப்படுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, மேலும் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் சப்ளையர் நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கான உதிரிபாகங்கள், உயர்தர வாகன மின்னணுவியல் உற்பத்தியிலும் தங்களை விரிவுபடுத்தி வருகின்றன.

இத்தகைய முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியும், வேலை வாய்ப்பும் அதிகளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கான உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி, மேம்பாட்டு மையங்களைத் தமிழ்நாட்டில் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு உதாரணமாக, மற்றொரு கொரிய நிறுவனம், தனது புதிய ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்தை புனேவில் அமைப்பதற்கு பதிலாக சென்னையைத் தேர்வு செய்துள்ளது.

அடுத்த கட்டமாக ஹூண்டாய் நிறுவனம், அதன் சப்ளையர் நிறுவனங்களுக்கான முதலீட்டுத் திட்டங்களை அறியவதற்கும், தேவையான உதவிபுரிவதற்கும், விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னெடுப்புகளை தமிழகம் மேற்கொண்டு வருகிறது." என்று தகவல் நம்பகத்தன்மை பிரிவு தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram