ஆட்சி அமைக்க விஜய்யை பொறுப்பு ஆளுநர் அர்லேகர் அழைக்காதது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனாலும் இதைப் பற்றி மௌனம் காத்துவந்த ஆளுநர் தரப்பு காரணம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
இன்று காலையில் நடைபெற்ற விஜய் சந்திப்புக்குப் பின்னர் வெளியிடப்பட்ட ஆளுநர் மாளிகையின் செய்திக்குறிப்பில்,
“ ஆளுநர் அர்லேகர் இன்று காலையில் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய்யைச் சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார். அதன்படியான சந்திப்பில் விஜய்யிடம் ஆளுநர் சில விளக்கங்களை அளித்தார். அதாவது, ஆட்சி அமைக்கத் தேவையான போதுமான பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கவில்லை.” என்று கூறப்பட்டுள்ளது.