சென்னையில் அமைந்துள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), "நீங்களும் ஒரு தொழில்முனைவோராகலாம்” எனும் தலைப்பிலான ஒரு பயிற்சியை 15.06.2026 முதல் 19.06.2026 வரை 5 நாட்கள் EDII வளாகத்தில் நடத்தவுள்ளது. இப்பயிற்சி தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடக்கும்.
இப்பயிற்சியில், தொழில்முனைவு குறித்த அறிமுகம், அடிப்படைகள், வணிக நெறிமுறைகள், வணிக ஒழுக்கங்கள், சந்தைப்படுத்துதல், பிராண்டிங் (Branding), டிஜிட்டல் சந்தைப்படுத்துதல், சந்தை ஆய்வு, திட்ட அறிக்கை தயாரித்தல், நிதி மேலாண்மை, Tally மென்பொருள் வாயிலாகக் கணக்கு பராமரிப்பின் அடிப்படைகள், GST, E-Way Bill, சிறு வணிகம் தொடர்பான சட்டங்கள், மாநிலத் தொழில் கொள்கை; குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்வகைப்பாடு மற்றும் பதிவு செய்தல் போன்ற தலைப்புகளின் கீழுள்ள பாடங்கள் பயிற்றுவிக்கப்படும்.
இப்பயிற்சிக்கு 18 வயதுக்கு மேற்பட்ட, குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதி பெற்ற ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (ஆண்/பெண்) விண்ணப்பிக்கலாம்.
சென்னை வளாகத்தில், ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதி வசதி ஏற்படுத்தி தரப்படும். இவ்வசதி முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும்.
இப்பயிற்சி குறித்த கூடுதல் தகவல்களுக்கு, www.editn.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். மேலும் விவரங்கள் அறிய, வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணிக்குள் 8668102600 / 7806918609 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டும் நமக்கு தேவையான தகவல்களை தெரிந்துக்கொள்ளலாம்.
இப்பயிற்சியில் கலந்துக்கொள்ள முன்பதிவு கட்டாயம். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.