தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 
தமிழ் நாடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு அவகாசம் நீட்டிப்பு!

Staff Writer

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் வெளியான இந்தத் தேர்வுக்கான அறிவிப்பில், தேர்வர்கள் 06.10.2026 முதல் 05.11.2026 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 30ஆம் தேதி, தமிழக அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பினை தற்போது நடைமுறையில் இருக்கும் வயதைவிட 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது.

அதைத் தொடர்ந்து, இத்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மூன்று நாள்கள் நீட்டித்து, வரும் நவம்பர் 8ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உட்பட்ட 46 பதவிகளுக்கான 6,574 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இத்தேர்வை நடத்துவதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram