தலைமைச் செயலகம் 
தமிழ் நாடு

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Staff Writer

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் இடமாற்றம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது.

அந்த அறிவிப்பு விவரம்:

* ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளராக பிரதாப் யாதவ் நியமனம்.

* கைத்தறி, ஜவுளி - காதி துறையின் செயலாளராக லில்லி நியமனம்.

* பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இன்னசென்ட் திவ்யா நியமனம்.

* வருவாய் நிர்வாகம் - பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளராக சந்திர மோகன் நியமனம்.

* அச்சு - எழுதுபொருள் துறையின் ஆணையராக சரவண செல்வராஜ் நியமனம்.

* குடிமைப் பொருள் வழங்கல் - நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் ஆணையராக அஜய் யாதவ் நியமனம்.

* பால் உற்பத்தி - பால் வளத்துறை இயக்குநராக சிவராசு நியமனம்.

* சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக சிவநந்தம் நியமனம்.

* டான்சி நிறுவன கூடுதல் தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்.

* தமிழ்நாடு நகர்ப்புற நிதி - உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவன முதன்மைச் செயலாளராக வெங்கடேஷ் நியமனம்.

* தமிழ்நாடு கனிமவள நிறுவன நிர்வாக இயக்குநராக கந்தசாமி நியமனம்.

* தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக கவிதா ராமு நியமனம்.

* தாட்கோ நிறுவன நிர்வாக இயக்குநராக செந்தில் ராஜ் நியமனம்.

* உள்துறை - மதுவிலக்கு கூடுதல் செயலாளராக மோகன் நியமனம்; பள்ளிக் கல்வித்துறை கூடுதல் செயலாளராக ஷ்ரேயா பி சிங் நியமனம்.

* சுற்றுலாத்துறை இயக்குநர், சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநராக ராஜ கோபால் சுங்காரா நியமனம்.

* விருதுநகர் ஆட்சியராக சரண்யா அரி நியமனம்.

* பெரம்பலூர் ஆட்சியராக அப்துல் ராஸிக் நியமனம்.

* திருப்பத்தூர் ஆட்சியராக நல்லசிவன் நியமனம்.

* வேளாண் துறை இணை செயலாளராக ரவிக்குமார் நியமனம்.

* வணிக வரித்துறை இணை செயலாளராக சங்கீதா நியமனம்.

* சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக ஜெயசீலன் நியமனம்.

* சென்னை குடிநீர் வடிகால் வாரிய செயல் இயக்குநராக சுகபுத்ரா நியமனம்.

* சென்னை மாநகராட்சி இணை ஆணையராக (சுகாதாரம்) தாகரே சுபம் தந்தியோரோ நியமனம்.

* சிப்காட் நிறுவனத்தின் செயல் இயக்குநராக வீர் பிரதாப் சிங் நியமனம்.

* திருச்சி மாநகராட்சி ஆணையராக பொன்மணி நியமனம்.

* வேலூர் மாநகராட்சி ஆணையராக கேத்ரீன் சரண்யா நியமனம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram