பொன் சின்னத்தம்பி முருகேசன் 
தமிழ் நாடு

மொழிபெயர்ப்பாளர் பொன். சின்னத்தம்பி முருகேசன் மறைவு!

Staff Writer

மூத்த மொழிபெயர்ப்பாளர் பொன். சின்னத்தம்பி முருகேசன் சென்னையில் காலமானார். நேற்று மாலையில் இயற்கை எய்திய அவரின் இறுதி நிகழ்வு, திண்டுக்கல் அருகில் உள்ள அம்பாத்துறை கிராமத்தில் நடைபெற்றன.

வேர்கள், என் பெயர் பட்டேல் பை, சுற்றுச் சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு, இயற்பியலின் தாவோ, யுவான் சுவாங் இந்தியப் பயணம், ஓமரின் ஒடிசி ஆகியவை அவருடைய புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு புத்தகங்கள்.

அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி, ”அலெக்ஸ் ஹேலியின் 'வேர்கள்' , காப்ராவின் 'இயற்பியலின் தாவோ' , யான் மார்ட்டெல்லின் 'என் பெயர் பட்டேல் பை (Life of Pi) போன்ற பல நூல்களை மொழிபெயர்த்தவர். மனமார்ந்த அஞ்சலி.” என்று குறிப்பிட்டுள்ளார். 

எதிர் பதிப்பகம் அனுஷ்,” தூய தமிழ்ச் சொற்களை தனது மொழிபெயர்ப்புகளில் பயன்படுத்துவதை கொள்கையாக கொண்டவர். அவரின் மறைவு தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு பேரிழப்பு.” என்று குறிப்பிட்டுள்ளார். 

இயற்பியலின் தாவோ’ நூலுக்காக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான பரிசை இவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.