டிடிஎஃப் வாசன் கைது
டிடிஎஃப் வாசன் கைது 
தமிழ் நாடு

டிடிஎஃப் வாசன் கைது: காவல் துறையின் அடுத்த ஆக்‌ஷன் என்ன?

Staff Writer

வாகன விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது ஓட்டுநர் உரிமைத்த ரத்து செய்ய முடிவு செய்யபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிடிஎஃப் வாசன் என்பவர் இருசக்கர வாகன அதிவேக சாகங்களின் மூலம் யூ டியூபில் பிரபலமானவராக அறியப்படுகிறார்.இவர் அடிக்கடி அதிவேகமாக பயணம் செய்து சாகசங்களை மேற்கொண்டு வருவார்.

அதன்படி, காஞ்சிபுரத்திற்கு அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தன் இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தைத் தூக்கி சாகசம் செய்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 2 முறை தலைகீழாக சுழன்று விழுந்ததில் டிடிஎஃப் வாசன் படுகாயமடைந்தார்.

டிடிஎஃப் வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் பாலுசெட்டி சத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில்,சிகிச்சை முடிந்து திருவள்ளூர் அருகே உள்ள பூங்கா நகரில் நண்பரின் வீட்டில் இருந்த டிடிஎஃப் வாசனை பாலுசெட்டி சத்திரம் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் காவல் துறையினர் முடிவுசெய்துள்ளனர்.

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமைத்தை ரத்து செய்யவும் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.