அசோக வர்சினி 
தமிழ் நாடு

டிவி தொகுப்பாளர் அசோக வர்சினிக்கு பத்திரிகையாளர் நலவாரியப் பதவி!

Staff Writer

தொலைக்காட்சித் தொகுப்புரையாளர் அசோக வர்சினிக்கு பத்திரிகையாளர் நலவாரிய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்து நான்கு மாதங்கள் ஆனநிலையில், பல்வேறு அரசுக் குழுக்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இதில் பத்திரிகையாளர்களுக்கான நலவாரியத்தையும் மாற்றியமைத்து அரசு உத்தரவை வெளியிட்டுள்ளது. 

அரசுசார் உறுப்பினர்களுடன், ஊடக அதிபர்கள், மேலதிகாரிகள், செய்தியாளர்கள், ஒளிப்படக்காரர்களும் அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதில், தந்தி தொலைக்காட்சியின் விவாதத் தொகுப்புரையாளர் அசோக வர்சினியும் இடம்பெற்றுள்ளார். 

தமிழ் இந்து நாளேட்டின் ஆசிரியர் வெங்கடேஸ்வரன், தினமணி மூத்த செய்தியாளர் சா.ஜெயப்பிரகாஷ், தீக்கதிர் கவாஸ்கர், நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தியாளர் தமிழரசி, மாலை முரசு தொலைக்காட்சி தம்பி தமிழரசன், புதிய தலைமுறை வேலுச்சாமி, தி ஹிண்டு ஒளிப்படக்காரர் ஜோதி இராமலிங்கம், மாலை மலர் நிர்வாக இயக்குநர் பா.சிவந்தி ஆதித்யன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 

தமிழ் வளர்ச்சி, செய்தித் துறையின் செயலாளர் வே.ராஜாராமன் இதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளார்.