கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானதை அடுத்து, த.வெ.க. சார்பில் ஒரு வாரம் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அக்கட்சியின் தலைமை நிலையச் செயலகம் அறிவித்துள்ளது.
” சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று அமைச்சரும் த.வெ.க. பொதுச்செயலாளருமான என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.