முதலமைச்சர் விஜய் சிறு, குறு விவசாயிகளுக்கான பயிர்க்கடனில் குறிப்பிட்ட அளவு தள்ளுபடி செய்தார். இதற்கு விவசாயிகள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் சில விவசாயிகள் அமைப்பினர் இன்று கோட்டையில் நேரில் முறையிட்டனர்.
இதனிடையே, த.வெ.க. சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட உழவர் உரிமை இயக்கத் தலைவர் அருள் ஆறுமுகம், தேர்தல் வாக்குறுதியின்படி இந்த அறிவிப்பு இல்லை என்றும் சொன்னபடி கடன் தள்ளுபடியை அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
“ தமிழக அரசிடம் பணம் இல்லை என்றால் முதலில் வாக்குறுதி அளித்தபடி அறிவிப்பு கொடுத்துவிட்டு தேதி வாரியாக இரண்டு மூன்று கட்டங்களாக விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கலாம்! இது விவசாயிகளிடம் பெரும் எதிர்மறை எண்ணத்தையே உருவாக்கும்! தமிழக அரசே, உடனடியாக உங்கள் அறிவிப்பை மாற்றி வாக்குறுதிப்படி செயல்படுத்துங்கள்!” என்று அவர் தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.