பிரச்சாரத்துக்கு முன்னரே தேர்தல் அறிக்கைகளை வெளியிடும் கட்சிகளுக்கு இடையே, அதை வெளியிடாமலே இருந்துவந்தது விஜய்யின் த.வெ.க. ஒருவழியாக இன்று அக்கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சென்னை, தனியார் சொகுசு ஓட்டலில் வைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அனுமதிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர்.
மக்களுக்கான தேர்தல் அறிக்கை 2026 என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், பத்து உத்தரவாதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மகளிர் மேம்பாடு, உலகத்தரக் கல்வி, சுகாதாரமான தமிழ்நாடு, சமூகப் பாதுகாப்பு, அரசு ஊழியர் நலன், இளைஞர் முன்னேற்றம், விவசாயிகள் நலன், மீனவர் நலன், தமிழ்நாடு வளர்ச்சி, நல்லாட்சி ஆகியவற்றை வெற்றித் தமிழ்நாட்டிற்கான உத்தரவாதங்களாக த.வெ,க. குறிப்பிட்டுள்ளது.