விஜய்க்கு வாள் பரிசளித்த பதவிவிலகிய கரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 
தமிழ் நாடு

கொளத்தூர் கொத்து பரோட்டா... இன்னும் நிற்காத விஜய்யின் பஞ்ச் வசனங்கள்!

Staff Writer

கரூரில் இன்று காலையில் நடைபெற்ற த.வெ.க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். அப்போது, தேர்தல் பிரச்சாரத்தின்போது எப்படிப் பேசினாரோ அதே பாணியில் முதலமைச்சரான பின்னர் இன்றும் பேசினார்.

”ஐந்து நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள்”,

”பணமா ஜனமா என்று கேட்டால் எனக்கு ஜனம்தான்டா முக்கியம்”,

“சட்டசபையில் பார்ட்டி பண்டு என்றுதான் சொன்னேன்... எந்த பார்ட்டி, யாருனு சொல்லவே இல்லை. உடனே எடுத்தாங்க பாருங்க ஓட்டம்.. குற்றம் உள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும்.”,

“அண்ணா பிறந்த நாள் முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்தப்படும்... நான் ரீல் தாய்மாமன் இல்ல..ரியல் தாய்மாமன்.” ...

இப்படி விஜய் பேசியதில் பல பஞ்ச் வசனங்கள் பொறி பறக்க வைத்தன.

செந்தில் பாலாஜியைப் பற்றி பூடகமாகப் பேசிக்கொண்டே, இரண்டு கைகளையும் ஓடுவதைப்போல ஆட்டிக்கொண்டு, “கரூர் கம்பெனிக்காரர் ஒருத்தர் இருக்கிறார்... ஓடு ஓடு ஓடு என்று ஓடிக்கொண்டே இருக்கிறார்” என்றார் விஜய்.

மேலும், இன்னொருவர் வெளிநாட்டுக்குப் போய் ஒளிந்துகொண்டார் என்றதுடன், உடனடியாக, மு.க.ஸ்டாலினைச் சொல்லவில்லை என்றும் விளக்கம் அளித்தார். அவர் கூறியது சிங்கப்பூருக்குச் சென்ற எ.வ.வேலுவை என்பது தெரிந்தது.

சுமார் 25 நிமிடங்கள்வரை நீடித்த விஜய்யின் பேச்சில் பிரச்சார காலத்து நெடியே தூக்கலாக இருந்தது.

கடைசியாக, இடைத்தேர்தலில் வச்சு வெளுத்து விடுங்க மக்களே என்றதுதான் அவருடைய பேச்சின் உச்சகட்டம்!