சத்யபாமா, மரகதம் குமரவேல் முதல்வரிடம் வாழ்த்து பெற்றபோது...  
தமிழ் நாடு

விஜய்யிடம் வாழ்த்துப் பெற்ற புதிய த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள்!

Staff Writer

இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற புதிய த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் சத்யபாமா, மரகதம் குமரவேல் இருவரும் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முறையே தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, பெற்றிபெற்ற சத்யபாமா, மரகதம் குமரவேல், தங்களது எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகினர்.

அதைத் தொடர்ந்து, கடந்த 6ஆம் தேதி, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலிலும் அவர்களே த.வெ.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்தத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில், அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டனர். த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் விஜய் மட்டும் தனியாக இரண்டு தொகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மாநிலம் முழுவதும் உற்றுநோக்கப்பட்ட இந்த தேர்தலின் வாக்குகள், கடந்த அக்டோபர் 9ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவு வெளியானது. த.வெ.க. சார்பில் போட்டியிட்ட இருவரும் வெற்றிபெற்றனர்.

இந்நிலையில், இன்று காலை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், த.வெ.க. அமைச்சர்கள் முன்னிலையில் இவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

பின்னர், முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram